40 கிலோ தடை செய்யப்பட்ட பொருட்களை ஒருவர் காரில் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர் பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து தடை செய்யப்பட்ட குட்கா, பான்பராக் போன்ற 40 கிலோ போதைப் பொருட்களை காரில் கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
அதன் பிறகு கார் டிரைவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் வேல்முருகன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் போதைப் பொருட்களை கடைகளுக்கு மொத்தமாக சப்ளை செய்து வந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் வேல்முருகனை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.