வாடகை பணம் கேட்டதால் நண்பர்கள் இணைந்து டிராக்டர் உரிமையாளரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள காட்டுக்கொட்டாய் பகுதியில் கோதண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோதண்டபாணி டிராக்டர் மூலம் விவசாய நிலத்தில் உழுததற்கான வாடகைப் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அஜித் குமார் என்பவர் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனை அடுத்து கோதண்டபாணி வாடகை பணத்தை கேட்ட போது அஜித் குமார் தனது நண்பர்களான பழனிவேல், பிரபு, சந்தோஷ், குமார் மற்றும் சுந்தர் ஆகிய நான்கு பேருடன் இணைந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து காவல் நிலையத்தில் கோதண்டபாணி புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அஜித் குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.