கனடா மற்றும் அமெரிக்கவில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் (121 டிகிரி பாரன்ஹீட்) அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கடுமையன அளவுக்கு அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால் சாலையோரம் நீரூற்றுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வெப்பத்தின் காரணமாக தார் சாலைகள் உருகும் நிகழ்வு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கனடாவில் வெப்பநிலை உயர்வு காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 486 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெப்பத்தின் காரணமாக காட்டுத்தீ பரவியதால் நூற்றுக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அழிவு அதோடு நின்றுவிடவில்லை. சுமார் 100 கோடி கடல்வாழ் உயிரினங்கள் வெப்பத்தினால் வெந்து உயிரிழந்து கடற்கரையில் ஒதுங்கியது. இது சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.