இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒருபாவமும் அறியாத சுபஸ்ரீ பேனரால் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் மறைவுக்கு முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். அந்த இடத்தில் பேனர் வைப்பதற்கு முறையாக அனுமதி பெறாததால் விபத்து ஏற்பட்டதும் அவசர அவசரமாக அங்கிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. அதன்பின் லாரி ஓட்டுநர் மனோஜ் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இளம்பெண் உயிரிழப்புக்கு காரணமான பேனரை வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல இளம் பெண் உயிரிழந்த விவகாரத்தில் லாரி ஓட்டுநர் பேனர் வைத்தவர்கள் என பொதுவாக குறிப்பிட்டு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினரும் மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பேனர் அடித்த அச்சகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.