கொரோன வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு ஏமன் நாட்டுக்கு நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்துள்ளது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பலநாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு பல உலக நாடுகளும் தடை விதித்துள்ளது. அதன்படி ஏமன் நாட்டில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகள் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
தற்போது கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா, ஈரான் ,சிங்கப்பூர், பிரிட்டன், மற்றும் லெபனான் உட்பட 24 நாடுகளுக்கு இடையேயான விமான போக்குவரத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுவதாக ஏமன் அரசு அறிவித்துள்ளது.