கேரளா பால் பாயாசம்
தேவையான பொருட்கள்:
கேரளா பச்சரிசி – 1 கப்
ஃபுல் க்ரீம் மில்க் – 8 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
முதலில் பச்சரிசியை கழுவி, 4 கப் பால், சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரில் போட்டு, 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். பின் ஏலக்காய் பொடி , மீதமுள்ள பால் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து தீயை குறைத்து, 20 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், கேரளா பால் பாயாசம் ரெடி!!!