டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. புதிய அமைச்சரவை பதவி ஏற்ற நிலையில் நிலுவையிலுள்ள பரிந்துரைகள் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நாட்டில் உள்ள வேளாண் மண்டிகளை மேம்படுத்த ரூபாய் 1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு ரூபாய் 15,000 கோடி, கொரோனா பராமரிப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு ரூபாய் 23, 123 கோடி ஒதுக்கீடு செய்யவும், தேங்காய் வாரிய சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.