Categories
மாநில செய்திகள்

இன்று பகலிலும் மழை தான்…. நனைய ரெடியா இருங்க…. வானிலை மையம் ஜில் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல சுழற்சியால் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்தவகையில் இன்று சென்னை, கோயம்பேடு, கோடம்பாக்கம், புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் எழும்பூர், தேனாம்பேட்டை, அண்ணாசாலை, மந்தவெளி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்துவரும் நிலையில், இன்று பகலிலும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |