நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேசிய பேரிடர் சட்டத்தின் கீழ் உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மணிப்பூர், கேரளா, அசாம் மற்றும் மேகாலயா உள்ளிட்ட எட்டு மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் மொத்தம் 73 மாவட்டங்களில் அதிகபட்சமாக 10 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிப்புகள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொற்று பரவும் வேதத்தின் அறிகுறியையும் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.