Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் உணவு பொருட்கள் வினியோகம் குறித்து பொதுமக்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் புகார் புத்தகம் வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். புதிதாக குடும்ப அட்டை கோரி விண்ணப்பிப்போருக்கு 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பணியாளர்கள் பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |