தந்தை திட்டியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் விவசாயியான மகாராஜன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு பட்டப்படிப்பு படிக்கும் மூர்த்தி என்ற மகன் இருந்துள்ளார். தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான வகுப்புகள் செல்போன் மூலம் ஆன்லைனின் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் மூர்த்தி தனது ஆன்லைன் வகுப்புகள் முடிந்த பிறகும் செல்போனில் கேம் விளையாடுவது, நண்பர்களுடன் பேசுவது என்று எந்த நேரமும் போனும் கையுமாகவே இருந்துள்ளார். இதனைப் பார்த்த மூர்த்தியின் தந்தையான மகாராஜன் இவ்வாறு போனும் கையுமாக எந்த நேரமும் இருந்தால் எப்படி படிப்பாய் என்று அவரைத் திட்டியுள்ளார். இதனால் மூர்த்தி மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் மூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கீழே விழுந்து கிடந்துள்ளார். இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய அவரின் பெற்றோர் தனது மகன் வாயில் நுரை வந்த நிலையில் மயங்கிக் கீழே கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு மூர்த்திக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்ற மூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.