நல்ல பாம்பு கடித்தால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது சொந்தமான வயலில் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு செல்வராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வயலுக்காக பெருமாள் உர மூட்டைகளை வீட்டில் வைத்துள்ளார். அதன்பின் மூட்டைகளுக்கிடையே பதுங்கி இருந்த நல்ல பாம்பு ஒன்று செல்வராணி கடித்துள்ளது. இதனையடுத்து அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அப்பாம்பு வீட்டுக்கு அருகில் உள்ள புதருக்குள் சென்றுள்ளது.
இதில் பாம்பு கடித்த செல்வராணி மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்வராணி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து விசாரணை நடத்த காவல்துறையினர் பெருமாள் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது காவல்துறையினர் விசாரித்துக் கொண்டிருந்த போது செல்வராணி கடித்த பாம்பு மீண்டும் பெருமாள் வீட்டுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பாம்பை அடித்து கொன்றுள்ளனர்.