Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உங்களுக்கு அனுமதி இல்லை…. ரொம்ப பேர் வருவாங்க…. கலெக்டரின் தகவல்….!!

நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வணிகத்திற்கு அனுமதியில்லை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நேதாஜி மார்க்கெட்டில் மொத்த காய்கறி வணிகத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்த வணிகத்திற்கு அனுமதி வழங்கக்கோரி வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வணிகர்கள் வருகின்ற 12-ஆம் தேதிக்குள் அனுமதி தரவில்லை எனில் மொத்த வணிகம் நிறுத்தப்படும் எனவும், கடை அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இதுகுறித்து கூறியபோது, இந்த மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நேதாஜி மார்க்கெட் மூடப்பட்டு மொத்த காய்கறி வணிகத்திற்கு தடை விதிக்கப்பட்டு அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் கொரோனா தொற்று முழுமையாக குறையாமல் இருக்கும் நிலையில் மார்க்கெட்டில் மொத்த வணிகத்திற்கு அனுமதி வழங்கினால் அங்கு அதிகப்படியான மக்கள் கூடவும், வாகன நெரிசல் ஏற்படும் சூழ்நிலை உருவாகும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனால்தான் மொத்த வணிகத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். மேலும் இனிவரும் நாட்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மார்க்கெட்டில் மொத்த காய்கறி வியாபாரத்திற்கு அனுமதி கொடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் மாற்று இடத்தில் பல்வேறு குறைகள் இருப்பதாக தெரிவித்துள்ளதால் அதனை சீர் செய்யப்படும் என்றும் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |