‘நவரசா’ ஆந்தாலஜி வெப் தொடரின் டீஸர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் ஜெயேந்திராவுடன் இணைந்து ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி வெப் தொடரை தயாரித்துள்ளார். கௌதம் மேனன், கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், பிரியதர்ஷன், பிஜாய் நம்பியார், அரவிந்த்சாமி உள்ளிட்ட 9 இயக்குனர்கள் தனித்தனியாக இயக்கிய குறும்படங்களின் தொகுப்புதான் நவரசா. கோபம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு, வெறுப்பு, ஆச்சர்யம் போன்ற 9 உணர்ச்சிகளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படங்களில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், சித்தார்த், அதிதி பாலன், அரவிந்த்சாமி, ரேவதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Makkale, ungaloda superstars ellarum kadha solla varanga! #Navarasa from 6th August!#ManiSir @JayendrasPOV @Suriya_offl @VijaySethuOffl @Actor_Siddharth @thearvindswami @nambiarbejoy @menongautham @karthicknaren_M @karthiksubbaraj @priyadarshandir pic.twitter.com/eji6XMRKUF
— Netflix India South (@Netflix_INSouth) July 9, 2021
மேலும் இந்த தொடருக்கு ஏ.ஆர்.ரஹ்மான், கார்த்திக், ஜிப்ரான், ரான் ஈதன் யேஹன், அருள்தேவ் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘நவரசா’ வெப் தொடரின் டீஸர் வெளியாகியுள்ளது. மேலும் அதில் வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி நேரடியாக நெட்பிளிக்சில் இந்த தொடர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.