அரசு மருத்துவமனை கட்டிடத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
திருவாரூர் மாவட்டம் அரசு மருத்துவமனையில் உள்ள கட்டிடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் கட்டிடத்தின் மேல் தளத்தில் பெயிண்டிங் வேலை நடைபெற்று வந்தது. இந்தப் பணியை திருச்சி மண்ணச்சநல்லூர் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவர் செய்து வந்துள்ளார். அப்போது சதீஷ் கட்டிடத்தில் இருந்து திடீரென தவறி விழுந்து படுகாயம் அடைந்துள்ளார்.
இதனால் தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சதீஷ் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.