Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

இதுக்கா இப்படி பண்ணனும்…. நர்சிங் மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் உறைந்த உறவினர்கள்….!!

பெற்றோர் கண்டித்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள மணியாங்குடி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மதுபாஷினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். ஆனால் தற்போது கல்லூரி திறக்கப்படாததால் மதுபாஷினி வீட்டில் இருந்த நிலையில் மீண்டும் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என கூறியதால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த மதுபாஷினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதுபாஷினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |