Categories
சினிமா தமிழ் சினிமா

முதல் படத்திலேயே இரண்டு ஹீரோயின்கள்… மாஸ் காட்டும் அஸ்வின்…!!!

அஸ்வின் நடிப்பில் உருவாகவுள்ள என்ன சொல்ல போகிறாய் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி சீசன் 2’ நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் அஸ்வின். தற்போது அஸ்வினுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். விளம்பரப் படங்களை இயக்கி பிரபலமடைந்த ஹரிஹரன் இயக்கும் இந்த படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் புகழ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

Teju Ashwini, Avantika play the lead in Ashwin Kumar's next | Tamil Movie  News - Times of India

இந்நிலையில் ரொமான்டிக் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். அதன்படி தேஜூ அஸ்வினி, அவந்திகா ஆகிய இரண்டு புதுமுக நடிகைகள் நடிக்க இருக்கின்றனர். இதில் தேஜு அஸ்வினி கவினுடன் இணைந்து ‘அஸ்கு மாரோ’ ஆல்பம் பாடலில் நடனமாடி பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் என்ன சொல்ல போகிறாய் படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடைபெற்றுள்ளது. வருகிற ஜூலை 19-ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

Categories

Tech |