மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தப்பி ஓடிய டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள எட்டூர்வட்டம் சுங்கச்சாவடி பகுதியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கார் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மாட்டுத் தரகர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் அங்கிருந்து உடனே தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது அந்த விசாரணையில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடிய கார் டிரைவர் நத்தத்துப்பட்டி பகுதியில் வசிக்கும் கிராம பஞ்சாயத்து தலைவியின் கணவர் பாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் பாண்டியனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.