பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கு முன்பு, அவருக்கு மகாராணியார் ரகசிய வாக்குறுதி மற்றும் சத்தியம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் மாதத்தில் 9-ம் தேதி அன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கில் மகாராணியார் வருத்தத்துடன் தனியாக அமர்ந்திருந்தது, நாட்டு மக்கள் அனைவரின் மனதையும் நொறுக்கியது. எனினும் மகாராணியார் இளவரசர் மரணமடைந்த நான்கு நாட்களில் தன் கடமைகளை தொடங்கினார்.
இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது இளவரசரின் இழப்பில் இருந்து மகாராணி மீண்டு வர குறைந்தபட்சம் மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும் என்று கருதப்பட்டது. எனினும் மகாராணியார் விரைவில் அரச கடமைக்கு திரும்பியதற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.
இது தொடர்பில் அரச நிபுணர் ரிச்சர்ட் கே தெரிவித்துள்ளதாவது, இளவரசர் பிலிப் அரச பணிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் ஓய்வு பெற்றதற்கு பின்பு தன் சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். மேலும், தன் மரணத்திற்கு முன்பு சுமார் 13 மாதங்கள் மகாராணியாருடன் தான் இருந்திருக்கிறார்.
அப்போது அவர்கள் இருவருமே பேசிக்கொண்டதாவது, “தற்போது இருவரும் ஒன்றாக உள்ளோம். என்றைக்காவது ஒருநாள் யாரேனும் ஒருவருக்கு ஏதாவது நிகழும். அதனால் ஒருவர் துக்கம் அடைய வேண்டி வரும். எனினும் அதிக நாட்கள் அந்த தூக்கம் இருக்கக்கூடாது. உடனடியாக மீதமிருக்கும் வாழ்க்கையை வாழ வேண்டும்.
இயல்பு நிலைக்கு திரும்பி விட வேண்டும்” என்று தீர்மானித்துள்ளனர். அவ்வாறு இருவரும் வாக்குறுதி பெற்றுக்கொண்டது தான் மகாராணியார் இயல்பு நிலைக்கு எளிதில் திரும்ப காரணம் என்று கூறப்பட்டுள்ளது.