Categories
ஆன்மிகம் இந்து

ஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள்… செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன…? கட்டாயம் படிங்க…!!!

ஜாதகத்தில் நவகிரக தோஷம் இருப்பவர்கள் சில எளிய தானிய பரிகாரங்களை செய்தாலே போதும். நவகிரகளுக்கு உரிய நவதானியங்கள் மற்றும் அதன் பலன்களை என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்வோம்.

சூரிய பகவானுக்கு உரிய தானியம் கோதுமை. கோதுமையால் தயாரித்த உணவை படைத்தால், சூரிய பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலகும்.

சந்திர பகவானுக்கு உரிய தானியம் நெல். எனவே அரிசியால் தயாரித்த உணவை படைத்து வணங்கினால், சந்திர தோஷம் நீங்கிவிடும்.

செவ்வாய் பகவானுக்கு உரிய தானியம் துவாரை. இதனை படைத்து வணங்கினால், விபத்து, காயங்கள் போன்றவற்றை தவிர்க்கலாம். திருமண தடையும் நீங்கும்.

புதனுக்குரியது பச்சை பயிறு. இதனை சமைத்து படைத்து வணங்கினால், கல்வி தடை நீங்கும். பேச்சாற்றல் பெற முடியும். வணிகத்தில் வெற்றி பெறலாம்.

குரு பகவானுக்கு உரியது கடலை. கடலையை படைத்து வணங்கினால், மங்கள சுபாரியங்கள் சுலபமாக நடக்கும்.

சுக்கிர பகவானுக்கு உரியது மொச்சை. மொச்சையை படைத்து வணங்கினால், கலைகளில் வித்தகராக திகழலாம்.

சனி பகவானுக்குரியது எள். எள்ளை படைத்து வணங்கினால், எல்லாத் தடைகளும் நீங்கும். தேவையில்லா விரோதம் விலகும். நோய் குணமாகி ஆயுள் அதிகமாகும்.

இராகு பகவானுக்கு உரிய தானியம் உளுந்து. உளுந்து படைத்து வணங்கினால், நாக தோஷம் நீங்கும். முயற்சியில் வெற்றி கிடைக்கும்.

கேது பகவானுக்குரியது கொள்ளு. கொள்ளு படைத்து வணங்கினால், வாட்டி வதைத்த நோய்கள் எல்லாம் தீரும். மனதிற்கு உற்சாகமும், தெம்பும் கிடைக்கும்.

Categories

Tech |