இலங்கை அணி பேட்டிங் பயிற்சியாளருக்கு கொரோனா தொற்று உறுதியானது .
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி தற்போது தாயகம் திரும்பி உள்ளது. இந்நிலையில் அணி வீரர்கள் ,பயிற்சியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான கிரான்ட் பிளவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனிடையே இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி வருகின்ற 13 ஆம் தேதி கொழும்புவில் நடைபெற உள்ள நிலையில் இலங்கை அணி பயிற்சியாளர்க்கு கொரோனா தொற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .