Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நான் கேட்டேன் தரல…. பெண் தீக்குளிக்க முயற்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

காசோலை புத்தகத்தை வழங்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிட்டாளம் பகுதியில் சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது மனைவி நந்தினி உமராபாத் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடிக்கையாளராக இருந்து வருகின்றார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நந்தினிக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே கடன் வழங்கியவர்கள் வங்கி காசோலை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதனால் நந்தினி அவர் வாடிக்கையாளராக இருக்கும் வங்கியில் காசோலை புத்தகம் கேட்டுள்ளார்.

ஆனால் வங்கி மேலாளர் காசோலை புத்தகம் கொடுக்காமல் கடந்த 2 மாதங்களாக கடத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் மனமுடைந்த நந்தினி பெட்ரோல் கேனுடன் வங்கி முன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்ததோடு வங்கி மேலாளரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து சம்பவம் நடந்த 30 நிமிடத்தில் வங்கி மேலாளர் காசோலைப் புத்தகத்தை நந்தினியிடம் கொடுத்துள்ளார்.

Categories

Tech |