ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் பயங்கர தாக்குதல் நடந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று முன்தினம் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள காலா இ நாவ் நகரத்துக்குள் புகுந்து அந்த நகரத்தை கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உள்நாட்டு படைகள் தலீபான் பயங்கரவாதிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தியதன் விளைவாக அந்த நகரத்தை மீட்டெடுத்துள்ளன.
இந்த தாக்குதலில் உள்நாட்டு படைகள் 69 தலீபான் பயங்கரவாதிகளை கொன்று குவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 23 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் தலீபான் பயங்கரவாதிகளிடமிருந்து ஏராளமான ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.