காரில் கடத்த முயன்ற மண்ணெண்ணையை தாசில்தார் பறிமுதல் செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணெய் கடத்தப்படுவதை தடுப்பதற்காக அரசு வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விளவங்கோடு தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் சுனில்குமார் போன்றோர் மார்த்தாண்டம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிராயன்குழி பகுதியில் வந்த காரை அதிகாரிகள் நிறுத்த கூறியபோது டிரைவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்தின்படி அந்த காரை அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்றபோது டிரைவர் குறுக்கு சந்தில் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். அதன்பின் காரில் தாசில்தார் சோதனை மேற்கொண்டதில் 25 கேன்களில் சுமார் 1000 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெய் கேரளாவிற்கு கடத்த முயன்றது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து மண்ணெண்ணெய் மற்றும் காரை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு கடத்தலில் ஈடுபட்டவர் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.