அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அமெரிக்கா நாட்டில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் மத்தியில் நிவேதா என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகி உள்ளது. இதனை அடுத்து சில வினாடிகளில் அதே மாகாணத்தில் ஸ்டாக்டன் நகரில் மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவாகியுள்ளது என அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அந்த பகுதயில் உள்ள மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர்.