தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இரண்டு தவணைகளாக அந்த தொகை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 14 வகையான மளிகைப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட்டன.
இதனை அடுத்து மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கும் கொரோனா நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி முதல் தவணை கடந்த மாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணையாக ரூ.2000 நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்க ரூ.1,71,82,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலம் நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.