அகதிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தற்போது அதிரடியான தண்டனை ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஜெர்மனியில் Burbach என்னுமிடத்தில் புகலிட மையம் ஒன்று அமைந்துள்ளது. இதில் அகதிகள் வசித்து வருகிறார்கள். இதனையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு புகலிட மையத்தின் பாதுகாவலர்களும் சமூக சேவகர் ஒருவரும் ஒன்றாக சேர்ந்து அங்கு வாழும் அகதிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்கள்.
அதாவது அங்கு வாழும் அகதி ஒருவரை புகலிட மையத்தின் பாதுகாவலர்கள் அடித்து சித்திரவதை செய்து சுயநினைவை இழக்கச் செய்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி சுயநினைவு இழந்து, கீழே கிடக்கும் அகதியின் மீது பாதுகாவலர் ஒருவர் தன்னுடைய ஷீ காலை கொண்டு அழுத்தியபடி நின்றுள்ளார். இதனையடுத்து மற்றொரு அகதியை பாதுகாவலர்கள் வாந்தி எடுக்கச் செய்து அதன்மீது அவரை படுக்க செய்துள்ளார்கள்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அனைவரது மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரணை செய்த seign நகர நீதிமன்றம் வழக்கில் தொடர்புடைய 3 முன்னாள் பாதுகாவலர்களுக்கும், ஒரு சமூக சேவகருருக்கும் சுமார் 900 முதல் 3,500 யூரோக்கள் வரை அபராதம் விதித்துள்ளார்கள்.