85 வயது மூதாட்டி டேட்டிங் செய்ய இளம் ஆண்கள் வேண்டுமென விளம்பரம் வெளியிட்ட செய்தி மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஹட்டி ரெட்ரோஜ்(85) என்பவர் தனது 48 வயதில் கணவனிடம் தகுந்த வருமானம் இல்லை என்ற காரணத்திற்காக விவாகரத்து செய்துள்ளார். இவருக்கு இரண்டு குழந்தைகள் மற்றும் மூன்று பேரை குழந்தைகள் உள்ளனர். ரெட்ரோஜ் தனது கணவனை பிரிந்த பிறகு பல ஆண்களுடன் டேட்டிங் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மேலும் டிண்டர் என்ற ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் ஏராளமான ஆண்களுடன் டேட்டிங் வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
இதுகுறித்து ரெட்ரோஜ் கூறுகையில் தனக்கு மிகவும் பிடித்த 39 வயது நபருடன் இருந்த டேட்டிங் வாழ்க்கை முடிவு பெற்ற நிலையில் டேட்டிங் வாழ்க்கையில் ஈடுபட ஆண்கள் தேவை என்ற விளம்பரத்தை வெளியிட்டேன் என்றும் தனக்கு இஸ்ரேலை சேர்ந்த இளைஞரிடமிருந்து டேட்டிங் செய்ய அழைப்பு வந்தது.மேலும் அவர் என்னுடன் டேட்டிங் செய்ய மிகவும் ஆவலாக இருப்பதாகவும் கூறினார். இதனைத்தொடர்ந்து டேட்டிங் செய்வது தனக்கு மிகவும் பிடித்துள்ளது என்றும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்து வருவதாகவும் அது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் கூறினார்.