பிக்பாஸ் பிரபலம் ஷிவானி தலைகீழாக தொங்கி வொர்க் அவுட் செய்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவானி. இதை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். இதன் பின் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அதிக அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
Today I will do what others won't,
So Tomorrow I can do what others can't. #FridayMotivation #fridaymorning #FridayFitness pic.twitter.com/EWinaQhN2k— Shivani Narayanan (@Shivani_offl) July 9, 2021
இந்நிலையில் ஷிவானி ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிலும் குறிப்பாக கயிற்றில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டு ஷிவானி போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும் அதில் அவர் ‘இன்று நான் மற்றவர்கள் செய்யாததை செய்வேன், அப்போதுதான் நாளை என்னால் மற்றவர்களால் செய்ய முடியாததை செய்ய முடியும்’ என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.