தற்போது 7 – ஆம் கட்ட கீழடி அகழ்வாராய்ச்சியில் சுடுமண், கண்ணாடி மற்றும் பாசி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் 7 – ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி தற்போது தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் கீழடியில் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 9 – ஆம் தேதியன்று கீழடி அகழ்வாராய்ச்சியின் போது சுடுமண், கண்ணாடி மற்றும் பாசி மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கீழடி பகுதியில் சேதமடைந்த முதுமக்கள் தாழிகள், முழு உருவ மனித எலும்புக்கூடுகள், சிதறிய பானைகள், பாசி மணிகள், பெண்கள் அணியும் தங்க ஆபரணங்கள் உள்பட பல பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து நம் தமிழர்களின் பாரம்பரியம் ஆழ்வாராய்ச்சி மூலமாக உலகிற்கே எடுத்துக்காட்டு பட்டு வருகிறது.