Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அங்கு தான் போனேன்… மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!!

மூதாட்டியின் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து தங்க  நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆழ்வார் திருநகரி வாய்க்கால்கரை பகுதியில் மாரியம்மாள் என்பவர் தனியாக வசித்து வருகின்றார். இவரின் மகள் அடுத்த தெருவில் தற்போது புதிய வீடு ஒன்றை கட்டி வருவதால் அந்தப் பணிகளை மாரியம்மாள் சென்று பார்த்து வருவது வழக்கம். இந்நிலையில் மாரியம்மாள் தனது உறவினர் வீட்டின் விசேஷ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்ப வீட்டிற்கு சென்று தான் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கழற்றி பீரோவில் வைத்து பூட்டி விட்டு மீண்டும் வீடு கட்டிக்கொண்டிருக்கும் பணியை பார்ப்பதற்காக சென்றுவிட்டார்.

இதனையடுத்து மாரியம்மாள் வேலை முடிந்ததும் வீட்டிற்கு திரும்பி சென்று தனது நகைகள் எல்லாம் பார்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது அங்கு பீரோவில் வைத்திருந்த நகை பெட்டிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மநபர்கள் பெட்டியை திறந்து 89 பவுன் தங்க நகைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக மாரியம்மாள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சோதனை செய்தபோது மர்ம நபர்கள் பீரோவை சாவி போட்டு திறந்து 89 பவுன் தங்க  நகைகளை திருடிச் சென்றது  தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பட்டப்பகலில் வீடு புகுந்து  89 பவுன் தங்க  நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |