Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி இதற்காக தனி இணையதளம்…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் எதிலும் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதே முதல்வரின் அறிவுரை என்றும் பொது நிவாரண நிதிக்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மே 6-ஆம் தேதிக்கு முன்பு இருந்த கணக்குகள் தனியாக வைக்கப்படும். மே 7ஆம் தேதிக்கு பிறகு உள்ள கணக்குகள் தனியாக வைக்கப்படும். வரவு செலவுகள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்படும். தற்போது வரை 472 கோடி ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |