அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், ஆப்கானிஸ்தானில் 20 வருட காலமாக நடந்து வரும் போர் வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளுக்கும், அமெரிக்க அரசுக்கும் இடையே சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் ஆப்கானிஸ்தான் அரசுடன், தலீபான்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்போது தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தங்கள் படைகள் வெளியேற்றப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பில் வெள்ளை மாளிகையில் அவர் தெரிவித்திருப்பதாவது, ஆப்கானிஸ்தானில் தேசத்தை உருவாக்குவதற்காக தங்கள் படைகளை அங்கு அனுப்பவில்லை.
அந்த நாட்டின் வருங்காலத்தை சிறப்பாக்க அந்நாட்டின் தலைவா்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், அமெரிக்க மக்கள் பலரை அபாயத்தில் மாட்ட வைப்பதை நாங்கள் விரும்பவில்லை.