போலி சான்றிதழ்களை அதிகாரிகளிடம் சமர்ப்பித்து விசாவினை பெற்றுக் கொள்பவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று துபாய் நாட்டின் மூத்த வழக்கறிஞர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
துபாய் நாட்டில் வசித்து வந்த சிரியாவைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் தன்னுடைய மகனின் விசாவிற்காக போலியாக அனைத்து சான்றிதழ்களையும் தயார் செய்து அதிகாரிகளிடம் சமர்ப்பித்துள்ளார்.
இவரின் இந்த திருட்டுத்தனத்தை தூதரக அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள். இது தொடர்பான வழக்கு துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
அப்போது அரசு தரப்பு பேசிய மூத்த வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது, இவ்வாறு விசாவினை பெறுவதற்காக போலி சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் நபர்களுக்கு மோசடி வழக்கில் குறைந்தபட்சமாக 10 வருடங்கள் சிறை தண்டனை கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.