Categories
தேனி மாவட்ட செய்திகள்

கடைசியா தண்ணீர் குடிச்சிது… 2 மாடுகள் பரிதாபமாக பலி… பலகோணங்களில் போலீசார் விசாரணை…!!

தேனி மாவட்டத்தில் மர்மமான முறையில் 2 பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் வருசநாடு அடுத்துள்ள சிங்கராஜபுரத்தில் பிச்சைமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை மாடுகளிடம் பால் கறக்கப்பட்ட பின்பு வீட்டிற்கு பின்புறம் இருந்த தொட்டியில் 2 மாடுகளும் தண்ணீர் குடித்துள்ளது. இதனையடுத்து தண்ணீர் குடித்த சிறிது நேரத்திலேயே 2 பசுமாடுகளும் மயக்கமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து பிச்சைமணி வருசநாடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்திருக்கலாம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் கால்நடை மருத்துவர் மதுசூதனன் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |