சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நேரு காலனி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்கிறார்கள் என்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அப்பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்ற போது அங்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்து அவரை கையும், களவுமாக பிடித்து பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் வசிக்கும் தீபன் குமார் என்பது தெரியவந்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் தீபன் குமார் விற்பனைக்காக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த செய்த காவல்துறையினர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக தீபன் குமாரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.