Categories
உலக செய்திகள்

சிறுவனையா இப்படி செய்யணும்…? யாரையுமே இதுவரை அரஸ்ட் பண்ணல…. பிரபல நாட்டில் அதிகரிக்கும் வன்முறை சம்பவங்கள்….!!

இங்கிலாந்தின் தலைநகரில் 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை எவரையுமே கைது செய்யவில்லை என்று துப்பறிவு தலைமை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனிலுள்ள Lambeth என்னும் பகுதியில் 16 வயது சிறுவன் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் மர்ம நபர்களால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து துப்பறியும் தலைமை ஆய்வாளர் ஒருவர் கூறியதாவது, 16 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுள்ளார்.

மேலும் இதனை செய்த அந்த மர்ம நபரை தேடும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதனையடுத்து Lambeth மற்றும் sothwark பகுதிகளுக்கும், உள்ளூர் காவல் நிலையங்களுக்கும் தலைமை கண்காணிப்பாளராக திகழும் ஒருவர் இச்சம்பவம் குறித்து கூறியதாவது, 16 வயது சிறுவனை கொலை செய்த அந்த மர்ம நபரை கண்டுபிடிப்பதற்கு அப்பகுதி மக்கள் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |