Categories
உலக செய்திகள்

இங்கலாம் விடுமுறைக்கு போகாதீங்க…. வேகமாக பரவி வரும் கொரோனா…. எச்சரிக்கை விடுத்த பாதுகாப்பு ஆலோசனை செயலாளர்….!!

பிரான்ஸின் பாதுகாப்பு ஆலோசனை செயலாளர் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் பரவிய கொரோனா அனைத்து நாடுகளிலும் சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியது. இதனால் அனைத்து நாடுகளும் தங்களுடைய நாட்டு மக்களுக்கு கொரோனாவின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு ஏற்றவாறு சில முக்கிய தகவல்களை கொடுத்து வருகிறது. அதன்படி பிரான்ஸின் பாதுகாப்பு ஆலோசனை செயலாளர் தன் நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்த எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதாவது ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் இந்த ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மக்கள் தங்களுடைய விடுமுறையை கொண்டாட நினைத்து, அதற்கான பயணச்சீட்டை முன்பதிவு செய்திருந்தால் அதனை கூடுமான அளவு தவிர்த்துவிடுங்கள் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |