மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் பகுதியில் தடையை மீறி கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அப்பகுதியில் வாகனத் தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் காவல்துறையினர் நின்று கொண்டிருப்பதை பார்த்த அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி ஓடியவர்களில் ஒருவரை காவல்துறையினர் பிடித்து விட்டனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காந்திநகர் பகுதியில் வசிக்கும் தஸ்நேவிஸ் மரூத் மார்ஷல் என்பது தெரியவந்துள்ளது. அதன் பிறகு காவல்துறையினர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ 150 கிராம் கஞ்சா பொட்டலங்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து மார்ஷலை கைது செய்தும், தப்பிச்சென்ற வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.