கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தின் கொரோனா இரண்டாவது அலை பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள் தடுப்பூசி கொள்ளுமாறு கூறப்பட்டது. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் ஆர்வமுடன் நீண்ட நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
இதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்திலும் இன்று பொதுமக்கள் கோவிசீல்டு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக ஆரம்ப சுகாதார நிலையம் ,ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் குவிந்துள்ளனர். அப்போதே ஏராளமாக குவிந்த மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக இருந்தனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் பொதுமக்களை முகக்கவசம் அணியவும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.