Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு…? மத்திய அரசு எச்சரிக்கை…!!!

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் அங்கு ஊரடங்கு அமல்படுத்த படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. பின்னர் தமிழக அரசு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 12 மாவட்டங்களிலும் புதுச்சேரியில் ஒரு மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக எச்சரித்துள்ளது. கொரோனா அதிகரித்துள்ள மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |