Categories
தேசிய செய்திகள்

ஒடுக்கப்படும் ஊடகசுதந்திரம்… வெளியான பட்டியலில் இந்தியா…!!!

உலக நாடுகளில் ஊடகசுதந்திரம் ஒடுக்கப்படுவது குறித்து எல்லைகள் அற்ற பத்திரிக்கையாளர்கள் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. Reporters Without Borders (RSF) என்ற பெயரில் செயல்படும் இந்த அமைப்பு, உலகம் முழுவதிலும் ஊடக சுதந்திரத்தைக் கடுமையாக ஒடுக்கும் நாட்டுத் தலைவர்களின் சித்திரத்தை gallery of grim portraits என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

அதில் 37 நாட்டு தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது. அந்தப் பட்டியலில் இந்தியாவின் பெயரும் பிரதமர் மோடியின் படமும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான நாடுகள் பத்திரிக்கையாளர்கள் இயங்குவதற்கு மோசமான நாடுகள் என்றும் பல நாடுகள் மிக மோசமானவை என தனித்தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 13 நாடுகள் ஆசியா பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த வகைகளாகும்.

Categories

Tech |