1950 ஆண்டுமுதல் விளம்பரங்களைப் பார்க்கும் வசதி பதிவுத்துறையில் அறிமுகம் ஆக உள்ளது. 1.1.1950 முதல் 31.12.1974 வரை உள்ள காலத்திற்குரிய சொத்து விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய பதிவு துறை முடிவு செய்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வில்லங்க விவரங்களை இணையத்திலேயே பார்த்துக்கொள்ள முடியும். வில்லங்கச் சான்றிதழ்களை நாம் ஆன்லைன் மூலமாக பெற முடியும். விண்ணப்பக் கட்டணம் ஒரு ரூபாய் முதல் வருடத்திற்கு 15 ரூபாய் வரை.
கூடுதலாக ஒவ்வொரு வருடத்திற்கும் விவரம் பெற வருடத்திற்கு ஐந்து ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதுமானது. உதாரணத்துக்கு பத்து வருடங்களுக்கு வில்லங்க சான்றிதழ் பெற நீங்கள் 61 செலவு செய்தால் போதும். இதை உங்கள் வீட்டிற்கே கொரியர் அனுப்புவதற்கு கூடுதலாக 25 ரூபாய் கட்டணம் செலவாகும். ஆன்லைனில் நேரடியாக இதனை பிரிண்ட் செய்து கொள்ளவும் முடியும். இதற்கு 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.