Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்…. உதவித்தொகை பெற…. இதுதான் கடைசி தேதி…. கலெக்டரின் தகவல்….!!

வேலை வாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு 2006-ம் ஆண்டு முதல் வேலைவாய்ப்பு இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. இந்த திட்டத்தின் கீழ் பயன் அடைய விரும்புவோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பிக்க வேண்டும். எனவே 2016 ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி அன்று அல்லது அதற்கு முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இதனையடுத்து 9-ம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இறுதி வகுப்பை தவறியவர்களுக்கு மாதம் 200 ரூபாயும், பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதம் 300 ரூபாயும், மேல்நிலைக் கல்வி தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதம் 400 ரூபாயும், பட்டப்படிப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதம் 600 ரூபாயும் உதவித்தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. அதன்பின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்தவராயின் 45 வயதிற்கு குறைவாக இருப்பவர்களும், இதர வகுப்பினராயின் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாவிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதனைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் 600 ரூபாயும், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் 750 ரூபாயும், பட்டப்படிப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு மாதம் 1,000 ரூபாயும் உதவி தொகையாக 10 ஆண்டுகளுக்கு கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு பதிவு செய்த கடந்த மாதம் ஜூன் 30-ஆம் தேதி அன்று ஓராண்டு நிறைவாகி இருக்கவேண்டும் என்றும் இவர்களுக்கு வருமான உச்சவரம்பு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆகவே உதவித்தொகை பெரும் காலத்தில் எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் முழுநேர மாணவராக இல்லாமல் தொலைதூரக் கல்வி பயின்று வருபவராக இருக்க வேண்டும். அதன்பின் அரசுதுறை அல்லது தனியார் துறையில் ஊதியம் பெரும் பதவியில் அல்லது சுய வேலைவாய்ப்பில் ஈடுபடுபவராக இருக்காமல் முற்றிலும் வேலை இல்லாதவராக இருக்க வேண்டும்.

இவ்வாறு தகுதியுடையவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விண்ணப்பப் படிவத்துடன் அனைத்து கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை நகல் மற்றும் குடும்ப அட்டை நகலுடன் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 31-ஆம் தேதிக்குள் ஆர்.வி.எல். நகர், மன்னார்குடி ரோடு, விளமல் திருவாரூர் என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளுக்கும், மீதம் இருப்பவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கும் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து உதவித்தொகை ஆரம்பித்த காலத்திலிருந்து பயனாளிகள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சுய உறுதிமொழி ஆவணம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு சுய உறுதிமொழி ஆவணம் கொடுக்க தவறியவர்கள் உடனடியாக நேரில் வந்து கொடுக்க வேண்டும். இந்த தகவலை திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |