வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது .
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் நடந்த அரசு பொதுக்குழு கூட்டத்தில் மிகவும் எடை குறைந்து காணப்பட்டார்.இதனால் அதிபர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக அவர் பதவியிலிருந்து விலகுவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் வட கொரியா நாட்டில் நடக்கும் விஷயங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாவதில்லை.இந்த நிலையில் தென்கொரியா உளவு நிறுவன தலைவர் கிம் யுங் கீ கூறும்போது ,”அதிபர் கிம் ஜாங் உன் பத்திலிருந்து 20 கிலோவரை எடையைக் குறைத்துள்ளார்.
அவர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலான எந்த ஒரு பெரிய நோயும் இல்லை. மேலும் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் வெளிநாட்டிலிருந்து மருந்துகள் இறக்குமதியாகும். ஆனால் அந்நாட்டு அரசு அவ்வாறு எதுவும் இறக்குமதி செய்யவில்லை. தற்போதும் அதிபர் பல மணி நேரம் அரசின் முக்கிய கூட்டங்களில் கலந்துகொண்டு வருகிறார். மேலும் இந்த ஆண்டின் முதல் 5 மாதத்தில் சீனா – வட கொரியா நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம் 81 சதவீதமாக குறைந்தது . அதோடு கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக வட கொரியா நாட்டில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது .இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக “அவர் கூறியுள்ளார் .