பெண்ணை ஏமாற்ற முயற்சி செய்த வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சேவப்ப நாயக்கன் வாரி பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் ராஜலட்சுமி பணம் எடுப்பதற்காக தஞ்சாவூர் மிராசுதார் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் தனக்கு பணம் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அந்த வாலிபர் ராஜலட்சுமியிடமிருந்து ஏ.டி.எம் கார்டையும் ரகசிய எண்ணையும் வாங்கியுள்ளார். அதன்பின் அந்த வாலிபர் வேற ஏடிஎம் கார்டை வைத்து பணம் எடுப்பது போல் நடித்துவிட்டு எந்திரத்தில் பணம் வரவில்லை என்று ராஜலட்சுமியிடம் அவர் வைத்திருந்த ஏ.டி.எம் கார்டை கொடுத்துள்ளார். அந்த ஏ.டி.எம் கார்டை பார்த்த ராஜலட்சுமி அது தன்னுடைய கார்டு இல்லை என்பதை அறிந்தார்.
பின்பு தன்னுடைய ஏடிஎம் கார்டை கொண்டு சென்ற அந்த வாலிபரை சத்தமிட்டு கூப்பிட்டுள்ளார். ஆனால் அந்த வாலிபர் நிற்காமல் ஓடிச் சென்றுள்ளார். இதனால் ராஜலட்சுமி சத்தமிட்ட அதை பார்த்து அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை விரட்டிப் பிடித்து தஞ்சை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் தென்காசி புளியங்குடியைச் சேர்ந்த முகமது உவைஸ் என்பது தெரியவந்துள்ளது.