ஹோட்டலில் நடனமாடிக் கொண்டிருந்த பெண்ணின் தலையில் தொலைக்காட்சி உலோக சட்டம் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவை சேர்ந்த Tatiana Pokhorenko (35) என்ற பெண் Surgut நகரில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். பிறந்தநாள் விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த போது 25 அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த 200 கிலோ எடையுள்ள தொலைக்காட்சி உலோகச் சட்டம் Tatiana தலையில் விழுந்ததால்அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனைத் தொடர்ந்து ஹோட்டல் உரிமையாளர் மீது உயிரிழப்பு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் Tatiana குடும்பத்திற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.