ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மணல் திருட்டு அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் திருவாடானை பகுதி தாசில்தார் சேதுராமன் தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது வன்னிமரம் பகுதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது/
இதனையடுத்து தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் எஸ்.பி.பட்டினம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த ஓரியூரை சேர்ந்த பாண்டி என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய 3 டிராக்டரையும் பறிமுதல் செய்துள்ளனர்.