Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை”… வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை..!!

 பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை என வேலூர் ஆட்சியர் சண்முக சுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

சென்னை குரோம்பேட்டையை  சேர்ந்தவர்  இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23).  இவர் பி.டெக் படித்துள்ளார். கந்தன்சாவடியில் உள்ள  தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் சுபஸ்ரீ  பணி முடித்து விட்டு பள்ளிக்கரணை அருகே  சாலையில் தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது.

இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார்.அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  வேலூர் மாவட்டத்தில் விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறாக பேனர் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று  மாவட்ட ஆட்சியர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Categories

Tech |