ராமநாதபுரம் மாவட்டத்தில் தொண்டி-சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசு விரைவு நவீன சொகுசு பேருந்து இயக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி பொதுமக்கள் அளித்த கோரிக்கையின் அடிப்படையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் அதிரடி நடவடிக்கையில் தொண்டியிலிருந்து சென்னைக்கு அரசு விரைவு நவீன சொகுகு பேருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து தொண்டியிலிருந்து திருவாடானை, தேவகோட்டை, காரைக்குடி, திருச்சி வழியாக சென்னைக்கு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று இதற்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு எம்.எல்.ஏ கருமாணிக்கம் தலைமை தங்கியுள்ளார். மேலும் புதிய வழித்தடத்தில் செயலும் பேருந்தை கோடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பேருந்துகள் இயக்க போக்குவரத்துக்கு துறை அமைச்சரால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.